பாதிவிழி மூடியிருக்க பவளஇதழ் மெல்லத் திறந்திருக்க
பாதிவிழி மூடியிருக்க பவளஇதழ் மெல்லத் திறந்திருக்க
தூதுவிடுதோ காதலைப் புன்னகை எனும்புதுத் தென்றல்
ஏதிந்த பொன்மலை பொழுதில் அதிசயம் புதுநிலவே
போதவிழ் மொட்டே கேட்டுத்தான் சொல்லக் கூடாதோ
பாதிவிழி மூடிப் பவள இதழ்திறந்து
தூதுவிடு தோகாத லைப்புன் னகைத்தென்றல்
ஏதிந்த பொன்மாலைப் போதில் அதிசயம்
போதவிழ் மொட்டேநீ சொல்