பித்ததேகிகட்கு வற்றல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சுத்தமுள்ளி பேய்ப்புடல் தூதுணங்கான் சுண்டைகண்டங்
கத்தரிப யற்றைமணத் தக்காளி - நித்தமுறு
கஞ்ச(ம்)வல் லாரையிவை காய்த்தநறுங் காய்வற்றல்
விஞ்சுபித்த தேகிகட்காம் விள்

- பதார்த்த குண சிந்தாமணி

பொருளுரை:

வெண்முள்ளி, பேய்ப்புடல், தூதுவளை, காட்டுச்சுண்டை, கண்டங் கத்தரி, பயற்றங்காய், மணித்தக்காளி, தாமரை, வல்லாரை ஆகிய இவ்வகைக் காய்களின் வற்றல்கள் பித்தவுடலோர்க்காகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Dec-22, 9:06 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே