பார்த்திங்களா மச்சான் பஞ்சாங்கத்தை
இடை நோக்கிக்கும்
கொடை வள்ளலே/
கிடையாமல் நானும்
போய்க்கும் முன்னாலே/
நடையைக் கட்டிக்க
சோசியரிடம் தன்னாலே/
சோடியாக நம்மள
ஊராரும் பார்த்துப்புட்டாலே/
சோழி முடிஞ்சிருஞ்சு
கேட்டுக்கோ காதாலே/
நெஞ்சுக்குள்ள துடிக்குது
உசுரும் உன்னாலே /
நேத்தைக்கு
சொன்னேனே
கூழாங்கலாட்டம்
கிடந்ததுக்காம /
வேளாவேளை
பாத்துக்கோங்க
நன்னாள் ஒண்ணும்/
என்றேனே பார்த்திங்களா
மச்சான் பஞ்சாங்கத்தை/
குறிச்சிக்கிட்டிங்களா நாமும்
மாலைமாத்திக்கும் காலத்தை /