வெல்லும் அழகு

மிதிலைக் காட்சிப் படலம்



கலித்துறை

தேமா தேமா. கூவிளம் மா. காய்


'கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம்
வெல்லும் வெல்லும்' என்னம தர்க்கும் விழிகொண்டாள்;
சொல்லும் தன்மைத்து அன்றது குன்றும், சுவரும்திண்
கல்லும், புல்லும், கண்டுரு கப்பெண் கனிநின்றாள். 32

கொல்லுகின்ற வேலையும், உயிரைப் பறிக்கும் கூற்றத்தையும் வெல்லும் என்னுமாறு இவளது விழி மதமதத்தது. இவளது அழகைக் கண்டு குன்று, சுவர், கல், புல் அனைத்தும் உருகுமாறு கனியாகி நின்றாள். 32

எழுதியவர் : கவிச் சக்ரவர்த்தி கம்பன் (16-Dec-22, 11:39 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 81

மேலே