சின்னப் பூவே மெல்லப் பேசு

மல்லிகைப்பூ வசியக்காரியே
மகிழம்பூ பாசக்காரியே/
அல்லிப்பூ கெண்டைக்காரியே
ஆலம்பூ கொண்டைக்காரியே/

வாழைப்பூ இடையழகியே
தாழம்பூ சடையழகியே/
தென்னம்பூ பல்லழகியே
மிளகாய்ப்பூ சொல்லழகியே/

சங்குப்பூ கழுத்தழகியே
சாமந்திப்பூ சிரிப்பழகியே/
ஊர்க்குருவி கண்ணழகியே
உள்நாக்கின் நெல்லிக்கனியே/

தேக்கம்பூ வாக்குக்காரியே
தெவட்டாத பாட்டுக்காரியே/
கொடிமுல்லைப்பூ நளினக்காரியே
புளியம்பூ முறைப்புக்காரியே/

கொவ்வை இதழில்
தேனாகா மொழியெடுத்து/
தானாக நெருங்கி
சின்னப்பூவே நீ மெல்லப்பேசடி/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (16-Dec-22, 8:51 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 180

மேலே