சுந்தரத் தமிழினில் சொர்க்கம் காண்பமே - கலிவிருத்தம்

எதுகை இருந்தால் மட்டும், நான்கு சீர் நான்கடி மட்டும் போதாது. இது உங்கள் பதிவு.

இந்தப் பாடலில் என்ன இலக்கணம் என்று சொல்லி, சீரொழுங்கு உண்டா என்றும் சொல்லி, வாய்பாடுஞ் சொல்லுங்கள்.

கலிவிருத்தம் என்று சொல்லாதீர்கள். கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

கண்டபடி வகையுளி செய்யலாகாது.

எளிமையான வாய்பாடில் சொற்களைப் பிய்த்துப் போடாத கலிவிருத்தம்:

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(*மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(1 ,3 சீர்களில் மோனை)

வந்தனம் செய்திடில் வாழ்வுஞ் சீருறும்;
நிந்தனை பேசிடில் நேரும் துன்பமே!
இந்தியன் என்றசொல் ஏற்றம் நல்குமே;
சுந்தரத் தமிழினில் சொர்க்கம் காண்பமே! 1

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Dec-22, 3:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே