♥இமைகள்♥
உன் பட்டாம்
பூச்சி இமைக்குள்
மின்மினி பூச்சி
கண்ணின் ஜாலங்கள்...
உன் கண்மணி
நீச்சல் குளத்தில்
கருவாண்டின் நீந்தும்
அட்டகாச குளியல்...
உன் விழி
மின்னல் வெளிச்சத்தில்
மொழியின் பின்னல்
வார்த்தை ஊடல்கள்...
உன் காந்த
பார்வையில் இரும்பு
தூளாக சிதறும்
என் எண்ணங்கள்...