இறைவன்

கயிலைமழையானே.....

கரையற்ற மனதில்
கரையானாய் என் தந்தையே,
கறையற்ற அன்பில்
கரையில்லா எந்தையே,
கட்டற்ற ஆசையை
கட்டுப்படித்திய என் ஈசனே,
கண்ணற்ற மனதில் ஞான
கண்ணாய் எழுந்த பிதாவே,
கண்ணற்ற வாழ்க்கை குழியில்
கண்டுணர்ந்தேன் என் வழியில்,
கடலலையாய் இன்னல் உன் பாத கரை பட்டு அடங்க,
கண்ணீரில் மிதந்த முகமோ மீண்டும்
கண்ணீரில் மிதக்க ஆனந்தமாய்,
கண்ணற்றயறிவு சிந்தையை முடக்க
கண்கொண்டு வந்த எந்தையே.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

நமசிவாய

எழுதியவர் : பிரபுதேவா. சுபா (2-Jan-23, 12:53 pm)
சேர்த்தது : பிரபுதேவா சுபா
Tanglish : iraivan
பார்வை : 743

மேலே