189 காப்போர் சொல்லுக்கு அடங்கல் கடமை - தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல் 2
எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்
குடிகள் சீடர் குடிப்பணி செய்குவோர்
கொல்லர் தச்சர் நாவிதர் காழியர்
அடிய ரேமுதற் பஃறொழி லாளர்கள்
அனைவ ருந்தமை யாதரித் தாளுபாக்கு
ஒடிவில் கங்கணம் பூண்டுகொண் மேலவர்
உரைக்க மைந்துத மாது தொழிலெலாங்
குடில மின்றி யியற்றிடி லிம்மையும்
கோதி லம்பர மும்பெறு வாரரோ. 2
- தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”குடிமக்கள், ஒரு தலைமையைப் பின்பற்றுபவர் (மாணாக்கர்), வீட்டு வேலை செய்வோர், கொல்லர், தச்சர், நாவிதர், வண்ணார், வேலையாட்கள் முதலிய பல தொழிலாளர்கள் அனைவரும் தம்மை ஆதரித்து ஆளும் பொருட்டு அழியாத உறுதி பூண்டு முன்வரும் உயர்ந்தோர் சொல்லுக்கு அடங்கித் தாம் செய்யும் பெருமை மிக்க தொழில் எல்லாம் வஞ்சமின்றிச் செய்தால் இம்மை யின்பமும் மறுமை யின்பமும் அடைவார்கள்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
காழியர் - வண்ணார். குடிலம் - வஞ்சனை.
ஆளுபாக்கு – ஆளும் பொருட்டு. மாதுற - பெருமையுற
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
