மலரோடும் மாலைத் தென்றலோடும் காத்திருந்தேன்
மலரோடும் மாலைத் தென்றலோடும் காத்திருந்தேன்
கனவொடும் கவிதைத் தமிழோடும் காத்திருந்தேன்
இதழோடும் புன்னகையுடன் இனிய தேனோட
இன்னும் என்ன தயக்கமோ தந்திட அந்திப் பொழுதினில்
நான்மலரோ டும்மாலைத் தென்றலோ டும்காத்தி ருந்தேன்
நான்கனவோ டும்கவிதைத் தமிழோடும் காத்தி ருந்தேன்
ஏன்நீ இதழோடும் புன்னகையில் இனிய தேனோட
வான்நிலா வாழ்த்த தந்திடத்தயக் கமோஅந்திப் பொழுதில்
நான்மலரோ டும்மாலைத் தென்றலோடும் காத்திருந்தேன்
கற்பனைநெஞ் சோடும் கனவோடும் காத்திருந்தேன்
ஏனோ இதழோடும் புன்னகையில் தேனோட
தந்திட நீவரவில் லை