தனியாக வீதியில் நீநடக்கும் போதில்
![](https://eluthu.com/images/loading.gif)
பனிசிந்தும் மார்கழிக் காலைப் பொழுது
கனிசிந்தும் கன்னம் கவிதையாய் மின்ன
தனியாக வீதியில் நீநடக்கும் போதில்
புனையுதுநெஞ் சோர்கவி தை
பனிசிந்தும் மார்கழிக் காலைப் பொழுது
கனிசிந்தும் கன்னம் இரண்டு - பனியில்
தனியாக வீதியில் நீநடக்கும் போதில்
புனையுதுநெஞ் சோர்கவி தை
-----இருவடிவில் வெண்பாக்கள்
யாப்பினை சரியான யாப்பாசிரியர்கள் யாப்புநூல் மூலம்
மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்