புதுநகை புரிந்திடு பூம்புனலே - வஞ்சிவிருத்தம்

வஞ்சிவிருத்தம்
(விளம் விளம் காய்)

எதுகையும் மோனையும் இயைந்தவழி
இதயமும் வருடிடும் இளநகையே!
புதுநகை புரிந்திடு பூம்புனலே;
மதியுடன் வந்திடு மாலையிலே!

(கருத்து: கவின் சாரலன்)

மாபுக் கவிதைக்குச் சீர் ஒழுங்கு அவசியம்;

முதல் சீர் நான்கடிகளிலும் ஒரே வகை விளம் - கருவிளம்,
இரண்டாம் சீர் நான்கடிகளிலும் விளம்;
மூன்றாம் சீர் நான்கடிகளிலும் காய்ச்சீர்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jan-23, 10:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே