கொஞ்சும் நெருப்பு
கொஞ்சும் குமரியே
உன்னை கண்ட நாள் முதல்
எந்தன் நெஞ்சம் முழுவதும்
உந்தன் நினைவுகள்
கொழுந்துவிட்டு எரிகிறது
சூரியனை கண்டதும் தலைதூக்கி
சிரித்திடும் சூரிய காந்தி பூப்போல்
என் முகம் கண்டதும்
நாணம் கொண்டு சிரித்து
தலை குனிந்திடுவாய்
தாயின் மடியில் தலை வைத்து
உறங்கி வளர்ந்த மழலை நான்
உன் மடியில் தலை சாய்த்து
உறங்கிட துடிக்கின்றேன்
நீ "கொஞ்சும் நெருப்பு" என்றாலும்
உன்னை இழுத்து
அணைத்துக்கொள்ளவே
துடிக்குது எந்தன் கரங்கள்...!!
--கோவை சுபா