சிறந்த சித்தப்பா

நேரிசை ஆசிரியப்பா

என்ன நடக்குது எனக்குத் தெரியாது
எனக்கு வேண்டும் நிம்மதி தந்தை
யோர்மொடாக் குடியன் தாயோ
சீக்கு சீக்கிரம் இறந்தாள் எந்தன்
சின்னத் தந்தை வீட்டில் வாழ்க்கை
அவரது குழவி மூன்று கூட
அங்கே அத்தை பெத்த மூன்று
எந்தாய் தங்கை பெத்த தொன்று
தொத்தா உறவின் பிள்ளை மூன்று
அத்தனை யுடனே என்னுடன் பிறப்பு
என்னுடன் நான்கு அத்தனையும்
வளர்த்து ஆளாக்கி னார்சிறிய தந்தையே

சின்ன நயினா முடக்கு வாதநோயால்
ஆள்தூக்கி அமர்த்த மேற்பார்வை நடத்துவர்
சின்ன தொழிற்சாலை யதிலே பத்துப்பேர்
பணியா ளர்பார் எனது மூத்தோன்
என்னிளை யவனும் என்னுடன்
பணிசெய் தோமெம் வாழ்க்கை நடக்கவே

தந்தை சாக தங்கை எங்களுடன்
குடிபுக நாங்கள் ஐவரானோம் கேளு
பட்டறை வேலை ஆயினும் பணப்புழக்கம்
அதிகம் சில்லறை திருட்டு செய்து
சீட்டா டித்தோற்பேன் குடிப்பேன் தேடிப்
போவேன் பொல்லா மாதர் வீடும்
சிறப்பாய் வாழ்ந்த சிற்றப்பா எனது
மூத்தோன் மற்றும் தங்கை கல்யாண
வைபவம் செய்து வைத்து
மற்றோரை அநாதியாக்கி பரலோகம் சென்றாரே

நேரிசை வெண்பா

சேர்த்தெமைக் கட்டவோர் சித்தப்பா இல்லையென
சோர்ந்து சிதறியது சுற்றமெலாம் -- சார்ந்திட
ஓடியோடி காணாது ஓடிப் பதுங்கியது
சாடவொனாக் கொண்டதெனை சாவு



....

எழுதியவர் : பழனி ராஜன் (16-Jan-23, 2:40 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : sirantha SITHAPPA
பார்வை : 34

மேலே