தங்கை ரமணி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கவி

அரையும் அரையும் ஒன்னு
இவங்க உழவர் கரையில் பிறந்த பொண்ணு

ஒன்னு ஒன்னு ரெண்டு
இவங்க பிறந்தநாளுக்காக கொடுக்க போறேன் பூச்செண்டு

ஒன்னு ரெண்டு மூணு
இவங்க பெண்ணாக பிறந்த மூணு

மூணு ஒன்னு நாலு
இன்னைக்கு தான் இவங்களுடைய பிறந்தநாள்

ஒன்னு நாலும் அஞ்சி
இவங்க எதற்கும் பயந்ததில்லை அஞ்சி
இவங்க அண்ணன் அடிக்கடி ஏழை மக்களுக்கு ஊத்துறாரு கஞ்சி


ஒன்னு அஞ்சு ஆறு
இவங்க குடும்பமே ஏழைகளின் தாகம்
தீர்க்கப் பிறந்த ஆறு

ஒன்னும் ஆறும் ஏழு
இவங்க அண்ணன் ஜனார்த்தனன் அடிக்கடி ஊத்துறாரு ஏழை மக்களுகள் பசியாற கூழு


ஒன்றும் ஏழும் எட்டு
ரமணியே உன் திறமையால் வாழ்க்கையில் உயரங்களை நீ எட்டு

ஒன்னும் எட்டும் ஒன்பது
நீ அனைவரும் காட்டுவது அன்பது


ஒன்று ஒன்பதும் பத்து
நீ கவிஞர் சுதர்சனம் சேர்த்து வைத்த சொத்து

உங்களுக்கோ இன்று பிறந்தநாள் எங்களுக்கோ அது சிறந்த நாள்

நீ நீடு வாழ வேண்டும் உன்னால் இந்த நாடு வாழ வேண்டும்

நீ நூறாண்டும் இப் பாராண்டும் சீராண்டும் ஊராண்டும் வாழ அன்போடு வாழ்த்துகிறோம்

எழுதியவர் : புதுவைக் குமார் (16-Jan-23, 3:53 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 356

மேலே