நட்பு நட்புத்தான்

மூச்சு இருக்கும் வரை
உறுதுணையாக இருந்திடும்/
மூச்சு திறந்த பின்னே
தோள்கள் கொடுத்திடும்/

உயிர் காந்திடும் உறவுக்கு
மேல் நமைக் காத்திடும் /
இன்பங்கள் துன்பங்கள்
நிகழ்கையிலே முன்
இருக்கை எடுத்திடும்/

கொடுத்து உதவிட
கரங்கள் தூக்கிடும்/
கெடுத்து வாழும் நினைவை
கிளையோடு அறுத்திடும் /

பாலிய நட்போ எந்நாளும்
நம் வேலியாய் இருந்திடும் /
கூலியாய் நித்தமும்
அன்பையே கேட்டிடும்/

தொட்டில் இட்ட அன்னைக்கும்
கட்டில் இடும் மனைவிக்கும் /
ஒட்டிப் பிறந்த உடன்பிறப்புக்கும்
மேலாக நிலைத்து நின்றிடும் /

பாசத்தில் வீழ்ந்து விட்டால்
வேசம் இல்லா நேசம் காட்டிடும்/
தன் உயிரையும் பரிசாகக் கொடுத்திடும்/

எதிரிகளின் சேட்டை கண்டால்
சாட்டையாய் மாறிடும் /
அன்புக்குள் அடைக்கலமானால்
கொடையாய் உயிரையும் திறந்திடும்/

உள்ளம் நோக்கியே
இல்லம் நுழைந்திடும்/
உள்ளார் இல்லார்
என்னும் வேற்றுமைக் களைத்திடும்/

சாதி மதம் பார்த்திடும்
கொடிய நோயை எரிந்திடும் /
கூடிக் குலாவி
கூட்டமாய்ச் சிரித்திடும் /

நட்பு என்பதோ
கற்பைப் போன்றது/
புரிந்து கொண்டால்
இரும்பை வென்றது/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (17-Jan-23, 2:09 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 365

மேலே