கனத்தது மனசு

கனத்த பர்சுடன்
வீட்டில் இருந்து
பலசரக்கு வாங்க
கடைக்கு சென்றேன்

நினைத்துப் பார்க்க
இயலாத நிலையில்
பொருள்களின் விலையேற்றம்
நினைத்தப் பொருளை வாங்க
எனது பொருளாதாரம் மறுத்தது
நேரம் செல்ல செல்ல
பர்ஸ் இளைத்தது
கைப்பை நிறையவில்லை

விலைவாசியேற்றம் ஒன்றே
நாட்டு மக்கள் எல்லோருக்கும் பேதமின்றி பொதுவானது போலும்

கீழ்தட்டு மனிதர்களை
நினைத்துப் பார்த்தேன்
மனம் வலித்தது
கனத்த மனசுடன்
வீடு திரும்பினேன்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (19-Jan-23, 6:06 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kanaththathu manasu
பார்வை : 307

மேலே