இன்னரு நகரமை - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
விளம், கருவிளம், கருவிளம், புளிமா
இன்னரு நகரமை யெரிமணி யிழையி
னுன்னரு மெழினல முடைவனக் கவினார்
பன்னரு மறநெறி பழுதற வினிதாய்த்
துன்னரு நயனொடு தொலைவன பொழுதே. 51
- நகரப் படலம், முதற் காண்டம், தேம்பாவணி
எழுத விரும்புவோர் பார்வைக்கு:
நான்கு சீர்கள், நான்கடிகள், சீரொழுங்கு,
கண்டபடி சீர்களை வகையுளி செய்யலாகாது.