கண்ணில் இரக்கம் - என்ன வாய்பாடு - அவலோகிதம் பயன்பாடு
தகுந்த இலக்கண அறிவுத் தெளிவும், முறையாக எழுதி, தகுந்த வழிகாட்டலுடன் முயற்சித்தால் அவலோகிதம் பேருதவியாகும் என்பது மறுப்பதற்கில்லை.
நான் எழுதும் பாடல்களைப் பரிசோதிப்பதற்கும், தெளிவுறுவதற்கும் இது தகுந்த துணையாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
எந்த வாய்பாடும் இன்றி எழுதப்பட்டது!
கலித்துறை
கண்ணில் இரக்கம் தாயெனும் எனக்க றிந்திடுவாய்
பெண்ணில் பெரியள் அமாவசை அன்றுதான் பக்தனுக்கு
விண்ணிலே தவழ விட்டேன் வெண்பௌர்ணமி யாய்ஒளிர
வெண்ணிலா கவி புனைவோன் தமிழ்க்கவின் சாரலனே!
இந்தப் பாடலுக்கு என்ன வாய்பாடு? எந்த அடிப்படையில் கலித்துறை என்கிறீர்கள்?
அவலோகிதத்தின் லட்சணத்தைப் பாருங்கள். நாம்தான் சிந்திக்க வேண்டும்.
மேலேயுள்ள அதே பாடலை வெவ்வேறு வகையாய் வகையுளி செய்தால் கிடைக்கும் பதில்:
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கண் ணில் இரக்கம் தாயெ னும்எ னக்க றிந்தி டுவாய்
பெண் ணில் பெரியள் அமாவசை அன்று தான் பக்த னுக்கு
விண் ணிலே தவழ விட்டேன் வெண் பௌர்ணமி யாய் ஒளிர
வெண் ணிலா கவி புனைவோன் தமிழ்க் கவின் சார லனே
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கண் ணில் இரக்கம் தாயெ னும்எ னக்க றிந்திடுவாய்
பெண் ணில் பெரியள் அமாவசை அன்று தான் பக்தனுக்கு
விண் ணிலே தவழ விட்டேன் வெண் பௌர்ணமி யாய்ஒளிர
வெண் ணிலா கவி புனைவோன் தமிழ்க் கவின் சாரலனே
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கண்ணில் இரக்கம் தாயெ னும்எ னக்க றிந்திடுவாய்
பெண்ணில் பெரியள் அமாவசை அன்று தான் பக்தனுக்கு
விண்ணிலே தவழ விட்டேன் வெண் பௌர்ணமி யாய்ஒளிர
வெண்ணிலா கவி புனைவோன் தமிழ்க் கவின் சாரலனே
கலித்துறை
கண்ணில் இரக்கம் தாயெனும் எனக்க றிந்திடுவாய்
பெண்ணில் பெரியள் அமாவசை அன்றுதான் பக்தனுக்கு
விண்ணிலே தவழ விட்டேன் வெண்பௌர்ணமி யாய்ஒளிர
வெண்ணிலா கவி புனைவோன் தமிழ்க்கவின் சாரலனே
கலித்துறை
கண்ணில் இரக்கம் தாயெனும் எனக்க றிந்திடு
பெண்ணில் பெரியள் அமாவசை அன்றுதான் பக்த
விண்ணிலே தவழ விட்டேன் வெண்பௌர்ணமி யாய்
வெண்ணிலா கவி புனைவோன் தமிழ்க்கவின் சார
கலிவிருத்தம்
கண்ணில் இரக்கம் தாயெனும் எனக்க
பெண்ணில் பெரியள் அமாவசை அன்றுதான்
விண்ணிலே தவழ விட்டேன் வெண்பௌர்
வெண்ணிலா கவி புனைவோன் தமிழ்க்கவின்
வஞ்சிவிருத்தம்
கண்ணில் இரக்கம் தாயெனும்
பெண்ணில் பெரியள் அமாவசை
விண்ணிலே தவழ விட்டேன்
வெண்ணிலா கவி புனைவோன்
வஞ்சித்துறை
கண்ணில் இரக்கம்
பெண்ணில் பெரியள்
விண்ணிலே தவழ
வெண்ணிலா கவி
ஆசிரியத்துறை
கண்ணில்
பெண்ணில்
விண்ணிலே
வெண்ணிலா
எனவே, ’அவலோகிதம்’ பயன்படுத்த ஒவ்வொரு விதமான பாடலுக்கும் உரிய வாய்பாடும், இலக்கணமும் அறிந்து பயன்படுத்துங்கள்; இது பேருதவியாகும்.
இதே பாடலை அடிப்படையாக வைத்து, ஒரு கட்டளைக் கலித்துறை எழுதி யிருக்கிறேன். இரண்டொரு நாளில் பதிகிறேன்.