கண்ணில் இரக்கங் கசிந்திடும் காரிகையே - கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறை

கண்ணில் இரக்கங் கசிந்திடும் பெண்ணாளே
..காரிகையே!
பெண்ணில் பெருந்தக்க பேணி யெனக்கே
..பிரியமுடன்
விண்ணில் தவழ்ந்துமே வேட்கை பெரிதாய்
..விளைந்திடலே
தண்மதி கண்கள் விரும்பிடுங் காட்சியாஞ்
..சாரலனே!

– வ.க.கன்னியப்பன்

கட்டளைக் கலித்துறையைக் ’காரிகை’ என்றும் சொல்வர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jan-23, 8:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே