காதலன் அணைக்க அழகுத் திரும்பும்
கலித்துறை
இனிய மாதவள் கிளிமொழி யதின்கிறங் கியவர்
பனியின் வெண்நிறம் பசலைய வளுடலில் பதிக்க
தனிமை வாட்டலை பறையதை சாற்றிடும் பகலாய்
கனிவாய் காதலன் அணைத்திட திரும்பிடு மழகே
தலைவி பேசிடும் கிளி மொழியைக் கேட்டு மயங்கினர் வாலிபர் மயக்கு மொழியாள் உடலாளும் கூட. இன்றோ அவளின் தலைவன் தொலைவில் சென்றமையால் உடல் மெலிந்து வெண்நிறப் பசலை படர்ந்து வாடியது பளிச்சென வெளிச்சம் போட்டு பகலவனாகக் காட்டியது. ஆனால் அவளது காதலன் திரும்பி வந்து ஆசைமொழிப்பேசி யவளை அணைத்திட உடனே வாளிப்புக் கூடிய பேரழகுடன் மாறுவள் என்க.