கொடியிடை அழகு

கலிவிருத்தம்

கொடியொடு அரசனும் குடிபிழை யொருப்பவன்
கொடியிடை மடந்தையை தொடர்ந்தவன் அலைந்திடன்
பிடியதின் இடையுடை இளவர சிநலமும்
குடியென மணந்திடும் உளமதில் நினைத்தே

நிரையசை களைக்கொண்டே அமைத்த கலி விருத்தம்
ஈற்றடியின் கடைசி சீர் மட்டும் புளிமாவில் முடியும்

அரசர் குமாரர்கள் கொடியிடை அன்னநடை நீலவிழி
கார்மேகக் கூந்தல் பால் நிலா முகம் உள்ள பெண்களை
மணப்பேன் என்று அவர்கள் பின் சென்று அடம்பிடித்துத்
திரிந்த தில்லை. நாட்டின் நலனைக் கருதி தந்தை மன்னரின்
சொல்படி அவர் காட்டும் பெண்ணையே ( அது பிடியிடை கொண்ட)
இளவரசியா யினும் மணந்து குடியைக் காத்தனர் என்பதாம்

எழுதியவர் : பழனி ராஜன் (24-Jan-23, 1:15 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kodiyidai alagu
பார்வை : 128

மேலே