288 மடியராய் உழையாதார் மரம் சவம் ஆவரே – சோம்பல் 1
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
சிற்றெறும் பாதியாச் சீவ கோடிகள்
முற்றுமெய் யுழைத்துயிர் முறையிற் காக்குமால்
சற்றுமெய் யசைவிலாச் சழக்க ராருயிர்
அற்றவோர் சவங்கொன்மற் றசர மேகொலோ. 1
- சோம்பல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”சிறிய எறும்பு முதல் கோடிக்கணக்கான எல்லா உயிரினங்களும் உடல் உழைத்து தம் உயிரை முறையாகக் காக்கின்ற பொழுது, சிறிதும் உடலை அசைத்து உழைக்காத சோம்பித் திரியும் தீயோர் அருமையான உயிர் இல்லாத பிணமோ அல்லது அசைவில்லாத பட்ட மரமோ?” என்றுகேட்கிறார் இப்பாடலாசிரியர்.
சழக்கர் – தீயோர், மடியர் - சோம்பேறி