289 உழையாது சோம்புவோர் ஒரு பெருந் தீயரே - சோம்பல் 2

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

விடக்குறுஞ் சடம்பல வேலை செய்தற்காய்
நடக்கவு மோடவு நனியு றுப்புகள்
மடக்கவு நீட்டவும் வாய்ந்த தாற்சும்மா
கிடக்குமெய்ச் சோம்புளோர் கேடு ளார்களே. 2

- சோம்பல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”இறைச்சி நிறைந்த அறிவில்லதாகிய இவ்வுடல் நடக்கவும், ஓடவும் போன்ற பல வேலைகள் செய்வதற்காகவே அமைந்தது. சிறிய உறுப்புகள் மடக்கவும், நீட்டவும் பொருத்தமாக வாய்ந்தன.

அப்படியிருந்தும், வேலை செய்யாது அந்த உறுப்புகளை சும்மா கிடக்கும்படி உடலைச் சோம்பேறியாக வைத்திருப்போர்கள் தீமையை அடைவார்கள்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

விடக்கு - இறைச்சி. சடம் - அறிவில்லது; உடல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jan-23, 4:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே