அன்றைய அரசாட்சி இன்றைய குடியரசு

அன்று நாட்டை ஆண்டான் அரசன்
அரசன் இறைவன் பிரதிநிதியாய் நீதி
வழுவாது ஆண்டான் மக்களையும் தன்வழியே
நடாத்தி நாட்டையும் வீட்டையும்
மண்ணிலே விண்ணகரமாய் மாற்றி
அது மனுவழி அரசாட்சிமாட்சிமை ஆட்சி

உருண்டோடும் காலச் சுழலில் மனிதன்
அரசாட்சி இல்லாமல் போனது மக்கள்
ஆட்சி அதைப் போக்கி வந்தது
குடி ஆட்சி...குடியால் குடிக்காக
குடியாட்சி குடியரசு இதன் பெயர்

அன்று மன்னன் எவ்வழி அவ்வழி மக்கள்
அன்று மாதம் மும்மாரி நிலத்தில்
போகம் முப்போகம் அறநெறி சார்ந்த
ஆட்சி அன்று மக்கள் மகிழ்ச்சி

இன்றோ குடியாட்சி என்று இருந்தும்
யார் ஆண்டால் என்ன எப்படி
ஆண்டாலும் 'நான் நலமாய் வாழனும்'
என்ற சுயநலத்தில் மக்கள் ,,,,,,இங்கு
இறைமை என்பதே இல்லாது போனது

இது என்ன குடியரசு ? எனக்கு புரியலையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (26-Jan-23, 1:47 pm)
பார்வை : 96

மேலே