194 குறிப்பின்வழி இயற்றும் குணம் மிக்கான் ஏவலன் - தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல் 7

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

நாவியல் உணவில் ஏனை
..நல்வினை களில்நம் பிக்கு
மேவிய விருப்பி னோடும்
..வெறுப்பினற் குறிப்ப றிந்து
தாவிய லாது தக்க
..ததியில்யா வுஞ்செய் சேடர்
ஆவியோ விழியோ எய்தற்
..கரும்பொனோ மணியோ யாதோ. 7

- தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நாவுக்குச் சுவையான உணவில், மற்றைய நன்மையான செயல்களில் தலைவனுக்குப் பாத்திரமான விருப்பத்துடனும், வெறுப்பு ஏற்படாத நல்ல குறிப்பு நிலை அறிந்தும் குறைவின்றி உற்ற நேரத்தில் எல்லாம் செய்யும் வேலையாட்களை உயிரெனவோ கண்களெனவோ கிடைத்தற்கரிய பொன்னெனவோ மணியெனவோ என்ன என்று கூறுவது?” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.

நம்பி - தலைவன். தா - குறைவு. ததி - உற்ற நேரம்.

saro: குறிப்பில் குறிப்பறிந்து உதவிடுவாரை
பொறுப்பாக சொல்ல வார்த்தைகள் ஏது?

குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்! 703 குறிப்பறிதல்

என்கிற குறள் நினைவுக்கு வருகிறது! நன்று

Dr.V.K.Kanniappan • 26-Jan-2014 10:26 pm

நல்லதொரு திருக்குறளை நினைவு படுத்தினீர்கள். நன்றி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jan-23, 9:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே