368 பிறரால் புகழப் பெறுவதே பெருமை – தற்புகழ் 1

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

தன்றுதி பிறர்சொலத் தகுமன் னோர்புகழ்
இன்றியே தன்னைத்தான் ஏத்தல் ஊர்தியில்
ஒன்றுமா பூட்டிடா தொருவன் உள்ளுறூஉம்
மன்றவே நடத்துவான் வலித்தன் மானுமே. 1

– தற்புகழ், நீதிநூல்
- வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”தன் புகழைப் பிறர் சொல்வதே தகுதியுடைய தாகும்.

அத்தகைய புகழ் இல்லாமல் தன்னைத்தானே புகழ்வது, வண்டியில் மாடு, குதிரை இவற்றுள் ஒன்றும் பூட்டாமல் ஒருவன் வண்டியுள்ளே இருந்தபடியே அவ்வண்டியை உந்தித் தள்ளுவதற்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

துதி - புகழ். மா - மாடு; குதிரை.
வலித்தல் - தள்ளுதல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jan-23, 4:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

சிறந்த கட்டுரைகள்

மேலே