குருவியக்கா என்னோட தோழியக்கா
🐤🐤"சின்னக்கா குருவியக்கா
சேதி சொல்ல வந்தாயா !
வெளியே எட்டி பாரக்கா
நான் உன்னோட தோழியக்கா !
பம்பரங் கூட்டுக்குள்ள
பஞ்சுமெத்த போட்டாயா !
அழகான பாட்டு பாட
எனக்குச் சொல்லி தர மாட்டீயா !
கொஞ்சம் இரையத் தேடி
சிறகடிச்சுப் பறந்தாயா !
கொஞ்சி கெஞ்சி குஞ்சுகளுக்கு
அந்த இரையத்தான் கொடுப்பாயா !
தண்ணி கிண்ணம் எங்கேயின்னு
கண்ண உருட்டி பார்ப்பாயா !
என்னோட ஊரு உலகம் இங்கேயின்னு
சுத்தி சுத்தி வந்தாயா !"🐤🐤