யானை மேல போலாம் சவாரி

🐘🐘 "குண்டு குண்டு யானை
            கண்ண உருட்டிப் பார்க்கும் யானை
               களிப்பூட்டும் கறுப்பு யானை
               பிளிறு சத்தம் போடும் யானை
               பொம்ம போல தலயாட்டும்
               அம்மா போல தாலாட்டும்
               சொக்க வைக்கும் யானை
               சொர்கத்த காட்டும் யானை
               குறும்புக்கார யானை
               கரும்பு தின்னும் யானை
               அலங்காரம் செய்யலாம் யானைக்கு
               பலகாரமும் கொடுக்கலாம் பாத்துக்கோ
               பான போல வயிறு
               யான போல யாரு
               கிலுகிலுப்பு ஊட்டும் தும்பிக்கையி
               கலகலப்பு ஊட்டும் நம்பிக்கையி
               கட்டிப் போட்டா நல்லதில்ல
               முட்டிப் போட்டா எல்லாம் நல்ல
               மதமதனு தந்தம் பாரு
               பொத பொதனு உடம்ப பாரு
               குழந்தைக்கும் பிடிக்கும் நல்லா ஆடு
               ஆசிர்வாதம் பண்ணும் காச போடு
               சாமி கல்யாணத்துக்கு ஊர்கோலம் போகுமா
               கால நீட்டி நீட்டி ஆடும் மழைக்காலமா
               மறச்சு வைக்க முடியாது தள்ளுமுங்க தள்ளுமுங்க
                மறக்கவும் முடியாது துள்ளுமுங்க துள்ளுமுங்க
                யான மேல அம்பாரி நாமும் போலாம் சவாரி"🐘🐘

எழுதியவர் : சு.சிவசங்கரி (1-Feb-23, 12:00 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 182

மேலே