கொக்கரிக்கும் சேவலு

🐔🐔 "கொக்கரிக்கும் சேவலு
            கொக்கரக்கோனு கூவுது
            கொக்கி போல தலையானே
            சொக்க வைக்கும் கொண்டையா !
            கொத்தி பார்க்கும் இரையத்தா !
            கொத்த வரும் நழுவத்தா !
            உறங்கடிக்கும் நின்னுதா !
            கிரங்கடிக்கும் கூர் பார்வதா !
            அன்ன நடை சிங்காரம்
            பின்னல் நடை ஒய்யாரம்
            சின்ன நடை சிலையழகா !
            குள்ள நடை வடிவழகா !
            விடியல் சொல்லும் விடையழகா !
            வேட்டை சொல்லும் வேடனழகா !
            குனிய குனிய விவகாரம்
            குந்த குந்த எகிறி விவகாரம்"🐔🐔

எழுதியவர் : சு.சிவசங்கரி (1-Feb-23, 12:08 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 141

சிறந்த கவிதைகள்

மேலே