நீதியே நீயெங்கே

அறுசீர் விருத்தம்

விளம் விளம் தேமா

ஓர்ந்திடும் தூக்கெடைக் கோலும்
..... உலகதின் நீதியை சொல்லும்

கார்கலப் பையுழு வோனும்
...... நம்பிடும் வேந்தரின் நீதி

பார்புகழ் வேந்துடை மன்று
சான்றவர் குழுக்களும் சாட்சி

போரென மனுவதை ஒர்ந்து
....... ஒருக்கவும் யாருளர் இன்றே



குறிப்பு: போரென --- போராய் குவிந்திருக்கும் மனுக்கள்

குறள் வெண்பா

ஒருபிடி யற்றயிரு கூர்வாள் பிடிக்கையன்று
ஒருக்கா மறுத்தநீதி பொன்று

விளக்கம்:---


கைப்பிடி யில்லாத,இருபக்கமும் கூரான வாளை ப்பிடித்து
அன்றைய நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள் . தவறினால்
நீதிபதிகளின் கையையேக் காயப்படுத்தும். ஆனால் இன்றோ
தன்னிச்சையாக செயல்படும் நீதி பதிகளால் நீதி அழிந்தது.


...

எழுதியவர் : பழனி ராஜன் (3-Feb-23, 8:36 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 251

மேலே