அவள்
செந்தாமரைக் குளத்தில் நீராடி வருகின்றாள்
செந்தாமரை முகத்தாள் கட்டவிழ்ந்த அவள்
கூந்தல் கருமேகமாய் அவள் தோளில்
கூம்பிய அவள் அதரம் தாமரை மொட்டு
நெற்றியோ மூன்றாம் பிறைச் சந்திரன்
தங்கத் தேர்போல் அசைந்து வருகின்றாள்
துள்ளும் கயல் விழியாள் அவள்
பார்வை என்மீது படுமா என்காதல்
தாகம் தீருமா என்று குளக்
கரையில் தவமிருக்கும் நான்