கன்னி யுன்றன் கண்களின் பார்வை - நிலைமண்டில ஆசிரியப்பா

நிலைமண்டில ஆசிரியப்பா

கன்னி யுன்றன் கண்களின் பார்வை
யென்மேற் பட்டா லென்காதல் நோய்தீரு
மென்றெண் ணியேநா னினிது நினைந்தே
யுன்வழி நின்றே நுன்மத்த னானேன்!
5 காத்து நின்றிடக் கனிவாய்க் கொஞ்சம்

பார்த்து நெஞ்சிள காயோ நேரிழையே!
உன்நோக் கென்மே லுலவிட வதுவே
வென்னைச் சொர்க்க மிதுவெனக் காட்டி
யென்மனக் காத லின்புற வாக்குமோ?

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Feb-23, 9:18 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே