உலகம் வசமாகும்
நோக்கம் சிறப்பானால் உலகம் வசமாகும்!
எண்ணத்திலே மெய்யிருந்தால் வாழ்வெல்லாம் இனிப்பாகும்!
ஏக்கமெல்லாம் கனவானால் பாரெல்லாம் உனதாகும்!
நோக்குமிடம் நன்மையென்றால் எல்லாமே தெளிவாகும்!
தூரநோக்குடனே வாழும்வரை ஏதொன்றும் பெரிதாகும்!
உன்னோக்கம் சிறப்பானால் உலகம் வசமாகும்!
சிந்தையிலே பிழையிருந்தால் முழுவதுமே விசமாகும்!
இலக்கு இல்லாத் துறையெல்லாம் உதவாக்கறையாகும்!
வழக்குமாறா மரபுகள்தான் எப்போதும் செழிப்பாகும்!
காடழித்துப் பயிரிட்டால் வளமிழக்கும் மண்ணைப்போல!
திட்டமிடா எதுவொன்றும் வீழ்ந்தே அழிந்துவிடும்!