அறஞ்செய விரும்பு வென்றே ஆத்திச்சூடி - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
(1, 4 சீர்களில் மோனை)
அறஞ்செய விரும்பு வென்றே
..ஆத்திச்சூ டியைத்தான் பாடி
மறந்திட முடியாத் தமிழை
..மணியெனச் சொன்னாள் ஔவை!
சிறப்பெனச் சொன்ன பாக்கள்
..செம்மையாய் வாழ்வைக் காட்டும்;
மறமெனக் கூறும் மெய்யே
..மாண்பினை ஓங்கச் செய்யும்!
- வ.க.கன்னியப்பன்