முருகன் துதி
சிந்தையில் செந்தில் நாதன் நிலையாய்
வந்து எழுந்தருள வேண்டும் -எந்தை
வேல்முருகன் என்னை எப்போதும்
நல்வழியே நடத்தி நல்ல பக்தனாய்
அவனடி ஒரு நொடியும் மறவாது
இறை தொண்டு செய்திட நல்லருள்
புரிந்திட வேண்டும் சிவகுரு கந்தவேள்
செந்தில் நாதன் போற்றி போற்றி
போற்றி ஆறுமுகன் போற்றி போற்றி
போற்றி சூரபத்மரை வென்றோன் போற்றி
போற்றி சேவற்கொடியோன் போற்றி
போற்றி மயில் வாகனனே போற்றி