அன்புள்ள கணவருக்கு
அன்புள்ள என் கணவருக்கு,
தனிமை பழகி போனவளின் கடிதம்...
திருமணமாகி இரண்டு வருடங்கள் தான் ஆகிறது
தனிமையை எனக்கு சொந்தமாக்கி விட்டாய்
உன்னோடு தான் இருக்கிறேன்
ஆனால் எங்கு போனது நமது கூட்டணி
இப்போதெல்லாம்,
என்னை பாசமாய் பார்த்த உனது கண்களுக்கு நான் விரோதியாய் தெரிகிறேன் போலும்
எழுந்ததும் கட்டி அணைத்த உனது கைகளை தேடுகிறேன்
என் மேல் படும் உன் மூச்சு காற்றை தேடுகிறேன்
பேசுகிறாய் ஆனால் அதில் உணர்வு இல்லை
என்னை தொடும் போது நான் அனுபவித்த காதல் இல்லை
தாலியின் கட்டாயமாய் சம்மதிக்கிறேன்
எங்கே நமக்குள் இருந்த காதல்
தினம் விடியும் போது பயம் தான் வருகிறது
எங்கே உன் வாயில் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கேட்டு விடுவாயோ என்று
எனக்கு மட்டும் தான் அந்த பயமா ?
நம் அன்பு இல்லாமல் போனது உனக்கு தெரிகிறதா ?
உன்னிடம் நிறைய பேச தான் எனக்கும் ஆசை - ஆனால்
தடுமாறுகிறேன்.. என்னையே தடுக்கிறேன்
உன்னிடம் வந்து பேச பயம்
எங்கே பிரிவு வந்து விடுமோ என்று
இந்த பிரிவையே என்னால் தாங்க முடியவில்லை
உன்னை விட்டு நிரந்தரமாய் பிரிவதா !! எண்ணி பார்க்க கூட பயம் !!
நீ சந்தோஷமாக இருக்கிறாயா ??
உனக்கு உன் குடும்பம் போதும் என்று சொல்கிறாயே
நான் வேண்டாமா ? நமது மகன் வேண்டாமா ?
தாய் தந்தையை விட்டு உனக்காக தானே இங்கு இருக்கிறேன்
அவர்களிடம் பேச கூடாது பார்க்க கூடாது என்றாய் .. சரி என்றேன்
எனது சகோதரியின் திருமணத்தை கூட நான் பார்க்கவில்லை உன் கௌரவத்தால்
உன் தாயின் சாடல்களையும் தாங்கி கொள்கிறேன்
உனது கோவங்களையும் தாங்கி கொள்கிறேன்
வேறு என்ன செய்ய வேண்டும் உனக்கு எனது அன்பை நிரூபிக்க ?
உன் தாய் நமது பிரிவை முடிவு செய்யும் அளவு முக்கியத்துவம் கொடுத்தாயே !!
நான் வேண்டாமா ?
உனது தாய் தங்கைக்கு அனைத்தும் யோசித்தாயே
எனக்கு என்ன வேண்டும் என்று ஒரு நாளும் கேட்க தோன்றவில்லையா ?
பிரிவு தான் நிரந்தரம் என்றால் பிரிவோம்
மீண்டும் நான் நானாக விரும்புகிறேன்
எனக்கு பிடித்ததை செய்ய விரும்புகிறேன்
நான் இழந்த சந்தோஷங்களை தேட வேண்டுகிறேன்
எனது சுய மரியாதையை தேட வேண்டும்
உனக்காக நான் இழந்த எனது தாய் தந்தையை பார்க்க வேண்டும்
சொந்தங்களை தேட வேண்டும்
உனக்கு இது சுயநலம் ஆக தெரியும்... இருக்கட்டும்
எனக்கு அது நிம்மதி !!! வாழ்க்கை சில காலம் தான்
என்று உனக்கு எனது அன்பு புரியுமோ அன்று வா ... பார்க்கலாம்...