அழகெல்லாம் ஆண்டவன் இயற்கையே
நேரிசை ஆசிரியப்பா
(ஒழுகிசை அகவல் ஓசை உடையது)
அஞ்சு பூதஞ் சிவமாம் ஈசன்
அஞ்சில் வானம் சிவத்தின் பேரை
கொஞ்சம் கொண்டு தானும் சதாசிவம்
அஞ்சுயிர் வாயு தான்மகேஸ் வரனாம்
வெஞ்சுடர் தீயும் சிவமாம் ருத்திரன்
கெஞ்சு நீரதும் மாலவன் திருவே
அஞ்சு நிலமதும் பிரம்மா
மிஞ்சி யொன்றும் தெய்வம் இல்லையே
குறள் வெண்பா
ஈசன் சிவனைப் பிரித்தார் இயற்கையது
பீஜம் நமசிவய என்று
.......

