காதல்

பரிணாம வளர்ச்சியின் பக்க விளைவுதான் காதல்

மெண்டலாக மெனக்கெடுவதுதான் காதல்

பூமியின் புவி சார் குறியீடுதான் காதல்

வயதுகளின் வலுக்கட்டாயம்தான் காதல்

உணர்வுகளின் செரிமானக் கோளாறுதான் காதல்

உடலில் உயிர் இருப்பின் உறுதிப்பாடு தான் காதல்

உடலில் அணுக்கள் செய்யும் ஆடம்பர செலவுதான் காதல்

அன்புக்கு கிடைக்கும் ஆறுதல் பரிசுதான்
காதல்

பூக்கள் செய்து கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் காதல்

வேதியியல் மாற்றத்தின் வேடிக்கை தனம் தான் காதல்

எமனையும் எமர்ஜென்சி வார்டில் படுக்க வைக்கும் நோய் தான் காதல்

வெள்ளை அணுக்களில் ஒரு வெள்ளை மாளிகை கட்டுவது தான் காதல்

சிவப்பணுக்களில் ஒரு சித்ரவதை கூடம்
கட்டுவது தான் காதல்

விழிகளின் விசப்பரிட்சை தான் காதல்

மூளை முடியாமல் போனதற்கான முதற்கட்ட அறிகுறி தான் காதல்

எழுதியவர் : வ. செந்தில் (14-Feb-23, 10:54 am)
சேர்த்தது : Senthil
Tanglish : kaadhal
பார்வை : 699

மேலே