காதலர் தினம்
காதலர் தினம்
அன்பையும் காதலையும் மென்மையாக கலந்து
அகமகிழ செய்யும் அழகிய அணங்குகளுக்கு
ஆழமுள்ள காதலை வெளிப்படுத்தும் ஒரு தினம்
ஆசைகள் பல இருந்தும் அதை புறம்தள்ளி விட்டு
தன் உறவுகளையும் கண்ட கனவுகளையும் விடுத்து
கைபிடித்தவனின் உறவையே நம்பி தனதாக்கி வாழும்
குதூகலமாய் கொண்டவனை மகிழ்விக்க வலம் வரும்
அகமுடையாளின் ஆழமான அன்பை நாம் கண்டறிய
இன்றொரு நாளும் ஜென்மமும் போதாது என்றறிந்து
அன்பை கொடுப்பீர் நாள் நேரம் கணக்கு பாராமல்