நேற்று எத்தனை ரோஜாக்கள்
நேற்று எத்தனை ரோஜாக்கள்
விற்காமல் போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள்
குப்பைக்கிப் போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள்
வாங்கிட்டு போயி வாங்காமல்
வாடிப் போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள் இடம் விட்டு இடம் மாறிப் போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள்
பையை விட்டு வெளியேறாமல் போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள்
தலை ஏறி ஊர் சுற்றப் போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள்
பதட்டத்தில் பதறிப்போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள்
தடுமாற்றத்தால் தயங்கி
இவன் கையிலேயே தங்கிப் போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள்
வாங்கி வைத்து தலையில் வைக்காமல் வாடிப்போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள்
மறுப்பு தெரிவித்ததால் மரணித்து போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள்
நம்பிக்கை இழந்து நடுத்தெருவிற்கு போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்களுக்கு
நான் படிக்கணும் எனும் பதில் கிடைத்தது
நேற்று எத்தனை ரோஜாக்களுக்கு
சாதி மதம் தடையாகிப் போனதோ