506 அளவிலா நோயை அளிப்பள் பொதுமகள் – கணிகையரியல்பு 33

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

கனைகடல்ம ணலையெணினும் வேசியர்சேர் ஆடவர்க்கோர்
..கணித முண்டோ
அனையர்நீ ரளவிடினு மவருட்கொள் சுக்கிலத்துக்(கு)
..அத்துண் டோவவ்
வினையவர்மெய் யுரோமத்தை யெண்ணினுநோய்த் திரளெண்ண
..விதான முண்டோ
இனையவரைச் சேர்த’ல்’பெருந் தீயினிடை மூழ்குதலை
..யேய்க்கு மாதோ. 33

– கணிகையரியல்பு, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

கடற்கரையின் நுண்ணிய மணலை எண்ணினும் பொதுமகளிரால் சேரப்படும் ஆடவரை எண்ணல் முடியாது.

அவர் உடல்மேல் காணும் மயிரை அளவிட்டாலும் அவரால் தம்மைச் சேர்ந்த ஆடவர்க்குக் கைம்மாறாகக் கொடுக்கப்படும் தீரா நோயை அளவிடமுடியாது.

அறியாமையால் பொதுமகளிரைச் சேர்தல் பெருந்தீயில் விழுவதையே ஒக்கும்.

கனைகடல் - ஒலிக்கும் கடல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-23, 6:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே