பனித்துளி

பனித்துளி...
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

பனித்துளி தளிர்களின் நுனியினில் அமர்ந்திடும் /

அமர்ந்திடும் நிலையினில் அடக்கிடும் உலகினை /

உலகினை உண்டபின் உருகிடும் வெயிலிலே /

வெயிலிலே ஆவியாய் வெளியினில் கலந்திடும் /

கலந்திடும் பனித்துளி கருமேகம்


திடமாய் திரவமாய் வாயுவாய் மாறிடும் சுழற்சியே /

சுழற்சியே இயற்கையாம் சுட்டுமே பனித்துளி !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (23-Feb-23, 10:04 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 156

மேலே