வானவில்

எல்லையில்லா வானிற்கு ஒரு ஆசை மனதில்
தனக்கேன் யாரும் ஆரம் சூட்டுவதில்லையே என்று
இதை நாரதர் சொல்லிக் கேட்ட திருமாலும்
மிகப்பெரிய ஏழு வண்ணங்களா லான
வானவில் படைத்தது சூட்டிவிட்டான் வானிற்கு
விண்ணளாவி மண்ணையும் சற்றே தொடும்
விந்தைத் தரும் வான வில்லாய்
இதுவும் மண்ணின் பூமாலைப் போல்
அழகாய் இருந்து அழகு மறைந்து
காணாமல் போகும் மீண்டும் மீண்டும்
வானில் வந்து போகும் வானிற்கு
அலங்கார அழகு ஆரமாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (12-Feb-23, 1:37 pm)
Tanglish : vaanavil
பார்வை : 158

மேலே