காலத்தின் உயிர்க்காற்று
🌏"கனவு வருமா ? கனவில் வரும்
நினைவுகள் நிஜமா ?
நினைவில் கனவுகள்
தொலைந்தே போகும்
கூண்டுக்கிளிக்கு இறகுகள் முளைத்தால்
அது தன் கூட்டுக்குப் பறந்தே போகும்
கூண்டுக்குள் வருமா ?
கூட்டுக்குள் போகுமா ?
இங்கு நிழலில் இருந்தாலும் நிழல்
நிஜமாகுமா ?
இங்கு நிஜம் கூட பொய்யாகுமே ?
இங்கு நிழலும் கருப்பு
நிழல் தரும் மரநிழலும் கருப்பு
உயிர்க்காற்று இல்லையென்றால்
நிழல் சாய்ந்து போகுமே !
உயிரின் வேகம் அதைவிட ...
காற்றின் வேகம் அதைவிட ....
காலத்தின் வேகம் அதைவிட ....
எல்லாம்
ஓய்ந்து போகுமா ?"🌏