பாதை தறிய மனிதம்

பாதை தறிய மனிதம்;பழகிப்போன மனம்;
கருணை கரைந்த புனிதம்;
அழுகிப்போன குணம்;
அழுக்கை சுமக்கும் மனித இனம்;
பரிணாம வளர்ச்சி சிதைவில் சீர்கேடு;
பரிதாப பயணம்;
பாதை தவறிய பயணம்; பயம் அறியாத மனம்;
பாதை தவறிய கால்கள்;போக விரும்பாத மனம்;
போதையேறிய உடம்பு; போகமுடியாது தல்லாடும் இந்த உடம்பு;
ஆசையில் முழுகிய மனிதன்;
அசிங்கத்தை பூசிய மனிதம்;
திரைபோட்ட மனது; திரும்பிப் பார்க்காத உறவு;
ஆசை கொண்ட மனிதம் ; ஆகாத புனிதம்;
புண் செய்யும் மனங்கள்;புனிதம் இழந்த மனிதன்;
புன்னியம் வதங்கிய பூமி; புழுவாய் துடிக்கும் பூமி;
கோணிய நேர்மையெனும் நேர்வழிப்பாதை;
வெற்றிப் பயணத்தில் வெறியாட்டம்;
வெட்கம் இல்லாத பயணம்; விலைபோனது மனிதம்;
புண்ணிமும் கண்ணியமும் புதையுண்டு போனது நிரசனம்;
ஊழல் ஊனியது காலை;
படுபாவம் படை எடுத்தது;
உடன்போனது செல்வாக்கும் சிபாரிசும்;
உண்டே கொழுத்தது லஞ்சம்;
நேர்மை தேடுது நெருடலை;
சில்லரை மனிதர்கள், சிரித்தே சரிக்கத்துடிக்கும் மனிதர்கள்;
கல்லறை போகத்தான் வேண்டும் என்றும் அறிந்தும்,
சில்லறை தேடும் மனிதக் கூட்டம்;
சீறிப்பாயும் குணம்; புதைந்துபோன மன்னியம்;
நேரமில்லை நேரமில்லை என்றே நேரத்தை வீணடிக்கும் பயணம்;
பணம் இருந்தா கொடு, குணம் இருந்தா வச்சுக்கோ, என்ற பக்குவம்;
பணம் இல்லேனே எடுக்க பழகிக்கோ என்ற தத்துவம்;
கொடையை நீ கொடுத்துக்கோ; உடைபோல மனச மாத்திக்கோ என்ற மக்கிய குணம்;
கொள்கையை மாற்றிக்கோ; கொல்லையடிக்க பழகிக்கோ என்ற மன தைரீயம்;
செத்துப்போன பாசம் ; விட்டுப்போன உறவு;
விடாது போடுது வேசம், பாதை மாறிய பயணம்;
மிச்சமில்லாத வாழக்கை ; அச்சம் இல்லாத பயணம்
பழிவாங்கத் துடிக்கும் மனித இனம்;
பாதை அறியாத மனிதம்;
கருவரை முதல் கல்லறை வரை
மிச்சம் இலல்லாமல் முடிவடைந்த பயணம்:
அசிங்க வாழ்க்கையின் துவக்கம்;
மிஞ்சிய மானத்தைத் தொலைக்கவும் இனக்கம்;
அச்சம் இல்லாத பழக்கம்; குடும்பத் துக்கு ஆகாத குணம்;
தயக்கம் இல்லாத தலைகுணிவு;
தடுமாற்றம் இல்லாத குற்றம்;
வெட்கம் இல்லாத வேட்கை;
வேறுபாடு இல்லாத பழக்கம்;
வேதனை இல்லாத மயக்கம்;
துணியின் அளவு குறைந்தாலும்
துணிச்சலுடன் வெளியில் செல்லும் துணிவு;
கருணை இல்லாத கணிவு;
இரக்கம் இல்லாத கொடூரம்;
கவனம் இல்லாத பயணம்;
தயக்கம் இல்லாத இயக்கம் ;
வீட்டு மானம் வீதிக்கு வந்தாலும்
கவலைப்படாத தன்னலம்;

வித்து தின்றாலும், சொத்தே அழிந்தாலும்
வாரம் முடிவில் வெளியில் சுற்றித்திரியும் பழக்கம்;
கொச்சை பேச்சி, கோவிலுக்குள் அசிங்கம்;
சுத்தம் இல்லாத சிந்தனை;
சிரித்தே பழகிட நிபந்தனை;
நாற்றம் பிடித்த நாகரீகம்;
நட மாடும் நடைபிணம்;
நொடி உணவைத்தின்று; நெந்துபோன பர்க்கரையும்,
தின்று, பாதியைத் தூக்கிப்போட்டு பைசாவைத் தந்தாலும் அச்சமில்லாத துணிவு;
ஆஸ்பத்திரிசென்று அவ்வப்போது கலைத்தாலும்; அசிங்கம் இல்லாத மனிதம்;
கடன் அட்டையை கையில் வைத்து கண்டதை வாங்கி, கவலையில்லாமல் செலவு செய்யும் துணிவு;
இச்ஜெகத்தில் எவன் எதிர்த்து வந்தாலும்
வைக்கிலும் கோர்ட்டும்
இருக்கும் வரை வாதாடுவே ன் என்ற தைரியம்;
மாலைசூடிய மறுநாளே ஓடிப்போக துணிச்சல்;
பாதை மாறிய மனிதத்தில்,
கறை படிந்த புண்ணியத்தில்,
கருணை கரைந்த புனிதத்தில்,
மனிதம் மண்டி இடுகின்றது;
மனிதாபம் தயங்கி தங்கி பேசுகின்றது;
புனிதம் மக்குகின்றது;
புண்ணியம் குறைகின்றது;
புதுப்பயணம் புதுப் பாதையில் தொடர்கின்றது.
பாதை தவறிய பயணம்
படிப்பினை கற்காத மனிதன்
அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (26-Feb-23, 6:04 pm)
பார்வை : 525

மேலே