சொல்…

திறந்த பேனாவை
மீண்டும் இறுக மூடி வைக்கின்றேன்
மை வழி என் மனது சிந்திவிடாதிருக்க…
இருந்தும்
சில வார்த்தைகளை மனமெழுதிச்
செல்கிறது…

இல்லாமல் நீ இம்சிப்பதை விட
ஏதும் பேசாமல்
இருந்து இம்சிப்பது வலிக்கிறது

கோடையில்
அசையா நிழல் மரத்தின் கீழ் நிற்பது போல்
ஒரே புழுக்கமாக இருக்கிறது…

ஒற்றைச் சொல்;
அது என் உயிரறுக்கும் சொல்லாகினும் பாதகமில்லை
சொல்லிச் செல்!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (26-Feb-23, 5:08 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 60

மேலே