என் இனிய தனிமையே//
உறவுகளுடன் கிடந்து
தவித்த எனக்கு//
அழகாய் என்னை உணர்த்தியது//
என் இனிய
தனிமையே//
எவரும் பின்
நிற்காமல் எவர்
பின் நான் வைக்காமல்//
என்னை இனிமை
படுத்தியது தனிமை//
மெது மெதுவாய்
அழகுகள் கூட்டியது//
தனிமையில் நான் கண்ட இனிமை எப்படி சொல்ல//
ஆனந்தத்திற்கு மறுபக்கம்
தான் தனிமையும்//
என்னை முழுமையாக கொள்ளை அடித்துச் சென்றது தனிமை//
இயற்கையோடு என் தனிமை பேசி என்னை ஊஞ்சலில் அமர்த்தியது//
தனிமை மிக அழகாய் என்னை உணர்த்திக் கொண்டே இருக்கிறது//
என் இனிய தனிமையே உன்னோடு நான்//