விழியோரம் விரிசல்
விழியோரம் விரிசல்!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
வழியெல்லாம் பூக்கள் வரப்போரம் தேக்கம் /
பழிபாவம் என்மேல் பரிதாபத்
தாக்கம் /
அன்புக்கு ஏங்கி அருளுக்கு
நீட்டி /
என்போடு தசையும் எதற்காக
வளர்த்தேன் /
காலங்கள் தாண்டி காதங்கள்
கடந்தே/
கோலங்கள் பூண்டு கோதைக்காய்
நின்றேன் /
ஊடலும் வேண்டும் ஊரெலாம்
ஏசிடும் /
தேடியே மாய்ந்தால் தெய்வமும்
காத்திடும்/
காவிரி உடைப்பிலே கரையோரம்
அமிழ்ந்திடும் /
விழியோர விரிசலில் வியனுலகே
முழ்கிடும்!!
-யாதுமறியான்.