சற்றுமுன் கிடைத்த தகவல்படி

காற்றுவீசும் மாலைவேளைக்கு
அறைக்குள்ளாரப் போயி
கதவு சாத்திக்கோ
சற்றுநேரம்வரை
யாரையும் அனுமதிக்காதே
மின்விளக்குகள் அணைந்திருக்கட்டும்
இறுக்கிப் பின்னலிட்டக்
கூந்தல் கற்றை அலைக்கழிய
காற்றிடம் நழுவக் கொடு
குளியலறைக் கொப்பரையில்
முகம் அலும்பிக்கொள்

அறையில
நிலைக் கண்ணாடி இருக்கா ம்
ஏதும் யோசிக்காமல்
கண்ணோடு கண்வைத்ததுபோல
அது உடல் குடிக்க நில்
ஒருமுறைப் பார்த்தப்பின்னால்தானே
உன் நிறத்தை
அளவெடுத்திருப்பாய்
குறுக்கப் பேசாதே
விழிகள் மூடியநொடிகளுக்குள்ளே
லேசாக இதழ் விரி
அருகில் இருக்கிறேனா பார்
இமைகளைத் திரையவிழ்க்கும்போது
கண்ணாடி கர்வமுடையும்
கன்னங்கள் சிவந்திருக்கும்
அழகாகியிருப்பாய்
குளிர்ந்த தேகம் சிலிர்த்திருக்க
மோவாய் உயரும்
முன் கழுத்தோரங்களில்
நரம்புகள் புடைத்தெழும் மெல்லிய கணமொன்றில்
ஒவ்வொன்றாக எண்ணிமுடித்து
முத்தமிடும் சவுகரியம் செய்யலாமா ம்
இதெல்லாம் நடக்கவில்லை என்றாலும்
உன் முகத்தை ஒரு இரவில்
நம் தனிமையின் கண்களுக்கு
விட்டுக்கொடு
என் பார்வையால்
உன் இறுக்கம் உடைத்து
உன்னை பெண் செய்கிறேன்
முழுநிலா விழுங்கிய உன் வானமாகிறேன் ம்
ப்ளீஸ்.


எப்போது அழைத்தாலும்
அலைப்பேசிக் கூச்சமுற
எத்தனைதடவை வெட்கித்திருக்கிறாய்
அப்போதெல்லாம்
கண்ணாடிப் பார்க்கணும்னு
ஒருமுறைக் கூடத் தோணலைதானே ம்

நம் சந்திப்பின் முன்னால் வரையும்
கண்ணாடில தானே
முழுநேரம் மூழ்கியிருப்பாய்
உலகத்திலேயே அதுதான் அழகுன்னு
தலைசிறந்த கர்வம்
கண்ணாடிவசம் இருப்பதைப்போல
இன்றெல்லாம்
என் வார்த்தை ஜாலங்களுக்குள்
அடைப்பட்டுக் கிடக்கிறாய்

இப்படியெல்லாம் நேசிக்கிறபோதுதானே
நீ அழகாய் இருப்பதே
உனக்குத் தெரியும்

இராத்திரியில
ஒரு ஷால் போர்த்திகிட்டு
அந்த மரப்பாலத்துக்கு நடுவில்
நிற்கிறாய்
நெளிந்த கூரான மூக்கு
சொல் பேச்சுக் கேக்காத கருங்குழல்
அளவெடுத்ததுபோல
இருக்கும் உதடுகள்
ஒற்றைக் கன்னத்தில் மாத்திரம்
விழுந்த கன்னக்குழி
நிலவொளிமேல் கிறங்கிய கண்கள்
இருள் முறிக்கும் மெளனம்
முகம் வருடிய கரங்களுக்கு
தடை இல்லை
புன்னகையைத் தவிர
இப்படி இப்படி
நீ மெளனித்திருக்கும்போதுதான்
உன்னை வர்ணிக்க
எத்தனை ஏது ம்

சரி நேரமாகிட்டு உறங்கப் போலாமா ம்
இதுக்குமேல
என்னால என்ன சொல்லமுடியும்
ஏன்னுக் கேக்காத
Because, I don't have you now wid me..
அடிக்கடி நமக்குள்ள
குட்டிக்குட்டி சண்டை ஏற்படும்போது
ஒரு வார்த்தை சொல்லுவியே
எங்க, அதை இப்ப சொல்லுப் பார்க்கலாம்
சரி வேணாம்
நானே சொல்லிடறேன்

""Someone is depart for something reasonable""

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (6-Mar-23, 12:46 am)
பார்வை : 62

மேலே